The Subject Line என்பது என்ன?

ஒரு காலத்தில் செய்தித்தாள்கள் மூலமாவும், தொலைக்காட்சி / வானொலி மூலமாகவும் மட்டுமே செய்திகளைத் தெரிஞ்சுகிட்ட மக்கள், இன்றைக்கு சமூக வலைதளங்கள், செய்தி இணையதளங்கள், வாட்ஸ்அப், யூடியூப்ன்னு பல தளங்களுக்கு மாறிட்டாங்க. ஆனாலும், ``மக்களால இணையத்துல செய்திய சரியா, முழுமையா தெரிஞ்சுக்க முடியுதா?"ன்னு கேட்டா, பதில் ``இல்லை"தான்.

ஒவ்வொரு நாளும் எத்தனையோ தேவையற்ற செய்திகள்ல நம் கவனமும், டேட்டாவும் வீணாகுது. குவியும் இந்த செய்திகளுக்கு மத்தியில் நமக்குத் தேவையான, நாட்டில் நடக்கும் மிக முக்கியமான விஷயங்களைக்கூட தவறவிடுறோம். விளைவு, ஒருநாளைக்கு பல மணிநேரம் நாம் ஆன்லைன்ல செலவிட்டாலும்கூட அந்த நேரம் நமக்குப் பயனுள்ளதா இல்ல. இணையத்தில் இன்றைக்கு செய்தி வாசிக்கும் ஒவ்வொருவரும் சந்திக்கும் இந்தப் பிரச்னைக்கான பதிலாகத்தான் The subject Line இருக்கப்போகுது.

  • ஆம், இது செய்திகளுக்கான ஒரு தமிழ் நியூஸ்லெட்டர். 📧

  • ஒருநாளைக்கு நீங்க இதுக்காக செலவு பண்ணப்போற நேரம் வெறும் 5 - 7 நிமிடங்கள்தான். ⏳

  • அதுவும் வேற எங்கயும் இல்ல; உங்களோட மெயில் இன்பாக்ஸ்லயேதான்.

  • திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 7 மணிக்கு அன்றைய நாளின் முக்கியமான விஷயங்கள் உங்கள் இன்பாக்ஸிற்கே வரும்.

  • அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் அரசு கொள்கைகள், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் தரப்படும்.

  • அதனால், தினமும் நீங்க எங்களோட 5 நிமிடம் செலவழிச்சா போதும்; நீங்க கூடுதல் ஸ்மார்ட்டாகுறதுக்கு நாங்க கியாரண்டி! 🙌

மற்ற ஊடகங்கள்ல இருந்து The subject Line எப்படி வேறுபட்டது?

தமிழகம் முதல் உலகம் வரை, எங்க என்ன நடந்தாலும் அவற்றை வெறும் செய்திகளா, பல ஊடகங்கள்லயும் நீங்க உடனுக்குடன் தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த நிகழ்வு ஏன் நடந்தது, எப்படி நடந்தது, அது உங்களை எப்படி பாதிக்கும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னனு சுருக்கமா, அதே சமயம் உங்களுக்குத் தேவையான முக்கியமான அம்சங்களை The subject Line-ல மட்டும்தான் தெரிஞ்சுப்பீங்க.

வழவழா கொழகொழா வார்த்தைப் பிரயோகமோ, ஒரு ட்வீட்ல முடியற விஷயத்தை அரைப்பக்கத்திற்கு நீட்டி முழக்கும் எழுத்து நடைகளோ நிச்சயமா இதுல இருக்காது. யார் படிச்சாலும் புரியும் எளிய மொழி நடையும், ரொம்ப கஷ்டமான விஷயங்களைக் கூட எளிமையா, சுருக்கமா விவரிக்கும் வர்ணனைகளும்தான் இங்க இருக்கும்.

உதாரணமா, எங்களோட இந்த முதல் எடிஷனைப் படிச்சுப் பாருங்களேன்; நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் 😊

The subject Line-ல் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை?

உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம். இங்கு வெளியாகும் எல்லா செய்திகளும் முன்னணி ஊடகங்களாலோ அல்லது அரசு தரப்பினாலோ ஊர்ஜிதப்படுத்தப்பட்டவையே. மேலும், ஒவ்வொரு செய்தி குறித்தும் நீங்க கூடுதலா தெரிஞ்சுக்க அதற்கான Source-ஐயும் செய்திகள்லயே குறிப்பிடவும் செய்வோம். அதனால இங்க வதந்திகளுக்கோ, பிறழ் தகவல்களுக்கோ நிச்சயமா இடம் இல்லை. 🚫

The subject Line-க்கு நீங்க ஏன் சப்ஸ்கிரைப் பண்ணனும்?

ஏற்கெனவே சொன்னதுபோல, இது தினமும் உங்கள் இமெயில் இன்பாக்ஸிற்கே வரும் நியூஸ்லெட்டர். அதனால், தினமும் நீங்க மிஸ் பண்ணாம படிக்க கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க.

ஆல்ரெடி பண்ணிட்டீங்களா? சூப்பர்ங்க.. அப்படியே எங்க நியூஸ்லெட்டரை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அறிமுகப்படுத்தி வையுங்களேன்..! 🥳

Subscribe to The Subject Line

செய்திகளை ஸ்மார்ட்டாகத் தெரிந்துகொள்ள உதவும் தமிழ் நியூஸ்லெட்டர். இனி உங்களின் தினசரி நியூஸ் டயட்... தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸில்!

People

6 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஊடகவியலாளர். விகடன் குழும ஊடகங்களில் இணையம், தொழில்நுட்பம், ஸ்டார்ட் அப்கள் & இவை சார்ந்த கொள்கைகள் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இணைய வாசகர்களுக்காக தற்போது The Suject Line நியூஸ்லெட்டரை எழுதிவருகிறார்.
உங்களின் தினசரி நியூஸ் டயட். உங்களை 5 நிமிஷத்தில் ஸ்மார்ட்டாக்க... தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸில்!