🔘 (Final) Recap: உக்ரைன் போர் முதல் டேட்டா விற்பனை வரை!
இந்த வாரம் மிஸ் பண்ணக்கூடாத Explainers-ம், TSL-ன் முக்கியமான மெசேஜூம் ❤️
Good Morning ☕️
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க; கூடவே, அதற்குப் பிறகு இருக்கும் TSL மெசேஜையும் மிஸ் பண்ணாம படிச்சிடுங்க!
🏷 இந்தியர்களின் டேட்டா விற்பனைக்கு! - என்ன செய்கிறது மத்திய அரசு?
🇺🇦 உக்ரைன் - ரஷ்யா போர்: தவறு செய்கிறதா இந்தியா?
✌️உள்ளாட்சித் தேர்தல்: உடைந்த `கொங்கு' கோட்டை!
🧬 HIV குணமான முதல் பெண்; உலகின் புதிய நம்பிக்கையா?
🏷 இந்தியர்களின் டேட்டா விற்பனைக்கு! - என்ன செய்கிறது மத்திய அரசு?
மத்திய அமைச்சகங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் தரவுகளை (Data), தனியார் மற்றும் தனிநபர்களுக்கு விற்பதற்கு ஆலோசித்து வருகிறது மத்திய அரசு. இதற்கான வரைவு அறிக்கையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம்.
எதற்காக இந்த திட்டம்?
மக்கள் தொகை விவரங்கள், ஆதார், பான், வாஹன் எனப் பல தரவுத்தொகுப்புகளை (Data set) தன்வசம் வைத்திருக்கிறது மத்திய அரசு. கொள்கை முடிவுகள் எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் இவற்றைப் பயன்படுத்திக்கொள்கிறது. ஆனால், முழுமையாகப் பயன்படுத்தப்படுத்திக்கொள்கிறதா என்றால் இல்லை. ஒரு அமைச்சகத்தின் தரவுகளை இன்னொரு அமைச்சகம் பயன்படுத்துவதிலேயே நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.
இந்தப் பிரச்னைகளைத் தீர்த்து, அனைத்து அமைச்சகங்களும் தங்களுக்குள் பொதுவான தரவுகளைப் பகிர்ந்துகொள்ள வழி செய்வது முதல் இலக்கு.
இப்படிப்பட்ட தரவுகளை அரசு துறைகளுக்கு மட்டுமன்றி, மாநில அரசுகள், ஆய்வாளர்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு விற்று லாபம் பார்ப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதும் முக்கிய இலக்கு.
இதற்காகத்தான், `India Data Accessibility and Use Policy’-ஐ வடிவமைத்திருக்கிறது அரசு. இது எப்படி செயல்படும், இதில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன? விரிவாக அலசுகிறது இந்த Explainer.
🇺🇦 உக்ரைன் - ரஷ்யா போர்: தவறு செய்கிறதா இந்தியா?
பல வார பதற்றத்திற்குப் பிறகு, உக்ரைனைத் தாக்கத் தொடங்கிவிட்டார் புடின். ``இது போர் அல்ல; உக்ரைனியர்களைக் காப்பதற்கான ராணுவ நடவடிக்கைதான்” என அவர் தொலைக்காட்சியில் பேசிய சில நிமிடங்களிலேயே உக்ரைன் நகரங்களில் குண்டுகள் விழத்தொடங்கிவிட்டன. ``ராணுவ முகாம்கள் மட்டும்தான் எங்கள் இலக்கு” என்ற வாக்குறுதிகளும் காற்றில் பறந்துவிட்டன. ஐரோப்பாவை அச்சுறுத்தியிருக்கும் இந்தப் போர் இனி என்னாகும்?
1. உக்ரைனைக் கைப்பற்றுவது மட்டும்தான் புடினின் இலக்கா?
2. மேலைநாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பாதிக்குமா?
3. இந்தியா ஏன் ரஷ்யாவைக் கண்டிக்க மறுக்கிறது?
4. NATO உக்ரைனைக் காப்பாற்றுமா?
இப்படி ரஷ்ய உக்ரைன் விவகாரத்தின் முக்கியமான பரிமாணங்களை அலசுகிறது இந்த TSL Edition.
✌️ உள்ளாட்சித் தேர்தல்: உடைந்த `கொங்கு' கோட்டை!
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாயின. சுமார் 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம், 12,838 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒருபுறம், 21 (21) மாநகராட்சிகளையும், 133 (138) நகராட்சிகளையும் தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது தி.மு.க. இன்னொருபுறம், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஓ.பி.எஸ், தங்கமணி என ஸ்டார் தொகுதிகளிலேயே மண்ணைக் கவ்வியிருக்கிறது அ.தி.மு.க. அக்கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் கொங்கு மண்டலமும் கைவிட்டிருக்கிறது.
இத்துடன், இந்த உள்ளாட்சித் தேர்தலின் இன்னும் சில முக்கிய ஹைலைட்ஸை இங்கே படிக்கலாம்.
🧬 HIV குணமான முதல் பெண்; உலகின் புதிய நம்பிக்கையா?
HIV-யால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, உலக அளவில் முதல்முறையாக சிகிச்சை மூலம் குணப்படுத்தியிருக்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். ஸ்டெம்செல் சிகிச்சையின் அடுத்தகட்ட பாய்ச்சலாகவும், HIV ஆராய்ச்சியில் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது இந்த செய்தி.
இந்த சிகிச்சையின் முக்கியத்துவம் என்ன, HIV சிகிச்சைகளில் இந்த இந்த சிகிச்சை எதுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என விரிவாக விளக்குறது இந்த TSL Explainer.
அந்த முக்கியமான மெசேஜ் இதுதான்! 👇
இன்னைக்கு நீங்க படிச்சுமுடிச்ச, இந்த Recap எடிஷன், TSL-ன் 89-வது எடிஷன்.
நவம்பர் 15-ம் தேதி வெளியான முதல் எடிஷனிலிருந்து, இன்று வரைக்கும் தினந்தோறும் TSL கூட பயணிச்சுட்டு வர்ற உங்க அனைவருக்கும் அன்பும் நன்றியும்! ❤️
தினசரி செய்திகளை இப்படி நியூஸ்லெட்டர் வடிவில் கொடுக்கலாம்னு முடிவெடுத்தபோது, இதற்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கும்னு இருந்த தயக்கமும் சந்தேகமும் இப்போ இல்லை. இதற்கு ஒரே காரணம், சுமார் மூன்று மாதங்களாக நீங்கள் கொடுத்த ஆதரவு மட்டும்தான். 🙏
TSL-ன் தினசரி எடிஷன்கள் பார்த்துட்டு, நீங்க அனுப்பும் மெயில்களானலும் சரி, சில வாரங்களுக்கு முன்பு சர்வேயில் கொடுத்த பரிந்துரைகளானலும் சரி, அவை ஒவ்வொண்ணும் TSL-ஐ ஏதாவதொரு வகையில் மெருகேற்றியிருக்கு. இதை நீங்களும் உணர்ந்திருப்பீங்கன்னு நம்புறேன்.
சரி, இதெல்லாம் இப்ப எதுக்குன்னு கேக்குறீங்களா? விஷயம் இதுதான்.
TSL-க்கு ஒரு குட்டி பிரேக்.
Yes. வரும் திங்கள் கிழமையிலிருந்து TSL எடிஷன்கள் வராது. அப்போ, எல்லாம் ஓவரா? இல்லை.
இலவசமாவே இணையமெங்கும் தகவல்கள் / செய்திகள் கொட்டிக்கிடக்கும் இந்த யுகத்தில், தரமான, தேவையான செய்திகள் மூலம் ஒவ்வொருவரின் நியூஸ் டயட்டையும் ஆரோக்கியமானதாக மாற்றணும்னு ஆரம்பித்த முயற்சிதான் TSL. அது இனியும் தொடரும்; ஒரு, சின்ன பிரேக்கிற்குப் பிறகு!
இந்த பிரேக்கும், TSL-ஐ மெருகேற்றும் முயற்சிக்காகத்தான். இந்த சமயத்தில் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும் ஒரு விஷயத்தில் தேவைப்படுது.
என்ன அது?
நிறைய இல்ல; ஒரு 2 நிமிஷம்தான். TSL-ஐ நீங்க எப்படி படிக்கிறீங்க, உங்கள் எதிர்பார்ப்பை நாங்க பூர்த்தி பண்ணியிருக்கோமா, நியூஸ்லெட்டர்கள் பற்றிய உங்களுடைய அனுபவம் என்னனு சில கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்க நினைக்கிறோம்.
நீங்க செய்யவேண்டியதெல்லாம், இந்த சர்வே ஃபார்மில் உங்க பதில்களைப் பதிவு செய்வது மட்டும்தான். ஏற்கெனவே சொன்ன மாதிரி, TSL-ஐ மேம்படுத்தவும், அடுத்தகட்டத்திற்கு TSL-ஐ கொண்டுசெல்லவும் உங்கள் கருத்துகள் உதவியா இருக்கும். அதனால, தவறாம பதிவு பண்ணிடுங்க.
அவ்வளவுதான்!
விரைவில் மீண்டும் சந்திப்போம்.
Happy Weekend 🏖
மிக முக்கியமான செய்திகள் TSL ஸ்டைலில் ட்விட்டரில் அவ்வப்போது அப்டேட் செய்ய திட்டம். எனவே இதுவரை TSL-ஐ ட்விட்டரில் ஃபாலோ செய்யவில்லையென்றால், இன்று செய்துவிடுங்கள்!
Why the newsletters stopped after this?