🔘 Recap: உக்ரைன் பிரச்னை முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
Good Morning ☕️
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🗳 ஏன் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லை?
🌈 காவல்துறையினருக்கு புதிய விதி; தமிழக அரசின் நடவடிக்கை ஏன் முக்கியம்?
🇺🇦 ரஷ்யா - உக்ரைன் பிரச்னை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
📮`பச்சக்கிளி' கடிதமும் NSE பங்குச்சந்தை கதையும்!
🗳 ஏன் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லை?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் கொஞ்ச நேரத்தில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் இடம்பெற்றிருந்த, நோட்டா (NOTA) ஆப்ஷனும், வாக்களித்ததை சரிபார்க்க உதவும் விவிபாட் இயந்திரங்களும் இந்த தேர்தலில் இருக்காது என அறிவித்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம்.
முதன்முதலாக தமிழகத்தில் 2013-ம் ஆண்டு ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்தான் நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் அனைத்து தேர்தல்களிலும், வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் நோட்டா இன்றி நடக்கிறது இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.
என்ன காரணம்? விடைசொல்கிறது இந்த TSL Brief.
🌈 காவல்துறையினருக்கு புதிய விதி; தமிழக அரசின் நடவடிக்கை ஏன் முக்கியம்?
தமிழக காவல்துறையின் நடத்தை விதிமுறைகளில் நேற்று புதிய திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்திருக்கிறது தமிழக அரசு. LGBTIQ+ (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer, Intersex, Asexual) சமூகத்தினரின் நலனுக்கான பணிகளில், மாநில அரசு சரியான திசையில் நகர்வதற்கான அறிகுறி இது. என்ன திருத்தம் இது?
காவல்துறையினர் நடத்தை விதிகளில் புதிதாக 24-C என்ற பிரிவைச் சேர்த்திருக்கிறது தமிழக அரசு.
இதன்படி, காவல்துறையினர் LGBTIQ+ சமூகத்தைச் சேர்ந்தவர்களையோ, LGBTIQ+ சமூகத்திற்காகப் பணியாற்றுபவர்களையோ எந்த விதத்திலும் துன்புறுத்தக்கூடாது. அதேசமயம், அவர்களிடம் முறையான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளவோ, சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ தடையில்லை. இந்த விதிமுறையை மீறினால் தண்டனை உறுதி. இதுதான் அந்தத் திருத்தம் சொல்லும் செய்தி.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நேற்று வெகுவாகப் பாராட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அந்தளவுக்கு இந்த சட்டத்திருத்தம் ஏன் முக்கியமானது? விளக்குகிறது இந்த TSL Explainer.
🇺🇦 ரஷ்யா - உக்ரைன் பிரச்னை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை நிறைவடைகின்றன. இந்தப் போட்டிகள் முடிவதற்குள்ளாகவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறி, தன்னாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொல்லியிருந்தது அமெரிக்கா. பிரிட்டன், எஸ்டோனியா, லத்திவியா, நார்வே ஆகிய நாடுகளும் இதேபோல தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியிருக்கின்றன.
உக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்திலிருந்து 1,30,000 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பைவிட, பெரியளவில் முகாம்களையும் அமைத்திருக்கிறது ரஷ்யா.
``எனவே இன்னும் சில நாள்கள்தான்” என எச்சரிக்கின்றன மேலை நாடுகள். ஆனால், ரஷ்யாவோ அமைதி காக்கிறது.
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து, அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் நேரடியாக தலையிட்டால் நிச்சயம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மோதலாக இது இருக்கும். ஐரோப்பாவின் அமைதி குலையும். உலகப் பொருளாதாதத்தில் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும்.
இவற்றைத் தாண்டி இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? விரிவாக அலசுகிறது இந்த TSL Explainer.
📮`பச்சக்கிளி' கடிதமும் NSE பங்குச்சந்தை கதையும்!
வடிவேலுவின் `பச்சக்கிளி’ காமெடியையே விஞ்சும் ஒரு சம்பவம் மும்பையில் நடந்திருக்கிறது. அதுவும் சாதாரண இடத்தில் இல்ல. இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான NSE (National Stock Exchange)-ல்.
என்ன நடந்தது?
2013 முதல் 2016-ம் ஆண்டு வரை NSE-ன் CEO-வாக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் 90-களில் தொடக்கத்திலிருந்தே NSE-ன் தோற்றம் & வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர். இந்த சித்ரா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல், கம்பெனியின் முக்கியமான முடிவுகளை, முகம்தெரியாத இமயமலையில் வாழ்வதாக நம்பப்படும் ஒரு சாமியாரின் அறிவுரையைக் கேட்டு எடுத்திருக்கிறார். கம்பெனி ரகசியங்களை அவருடன் பகிரவும் செய்திருக்கிறார். இந்த விவரங்கள் அனைத்தையும் கடந்த வாரம் தன் விசாரணை அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது செபி.
இந்தியாவின் மிகப்பெரிய ஒரு பங்குச்சந்தையின் தலைவர் இப்படியும் செய்வாரா என இந்த சம்பவத்தை வியப்போடு பார்க்கிறது உலகம். கூடவே, இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய முடிச்சுகளும் அவிழாமல் இருக்கின்றன என்பதால், பல கேள்விகளுக்கு விடை தெரியவும் காத்திருக்கின்றனர் பலரும்.
வருமான வரித்துறையினர், சிபிஐ உள்பட பலரும் இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில், இந்த முன்கதையைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
அவ்வளவுதான்!
TSL-ன் தினசரி நியூஸ்லெட்டர்ஸ் பிடிச்சிருந்தா உங்களின் நண்பர்களுக்கும் அதை ஷேர் பண்ணுங்க. TSL பற்றிய உங்கள் அனுபவங்கள், கருத்துகளைப் பகிர்ந்துக்க நினைச்சா எனக்கு மெயில் அனுப்புங்க! 😀
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
இந்த TSL Edition உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க! ❤️