25 ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தாரா இந்திய மருத்துவர்?
Today Edition Highlights: உயரும் மாஸ்க் அபராதம் | கவனம் ஈர்த்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் | அசத்திய ரிஷப் பன்ட் | Reading Time: ⏱ 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
வழக்காம Front Page பகுதியில் வெளிவரும் TSL Explainer இன்றைக்கு இல்லை. நேரடியா, முக்கிய அப்டேட்ஸ்க்கு போய்டுவோம்.
1. வலுப்பெறும் குரல்கள்:
சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில், மனைவியின் விருப்பத்துக்கு மாறான கட்டாய உறவானது (Marital Rape) இன்னும் குற்றமாக அறிவிக்கப்படவில்லை. இதில் இந்தியாவும் ஒன்று. இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது நடந்து வரும் வழக்கில், நீதிமன்றம் பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. முதல்முறையாக, Marital Rape-க்கு எதிராக இந்த வழக்கில் தீர்ப்பு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
RIT அறக்கட்டளை மற்றும் அகில இந்திய ஜனநாயக மகளிர் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள் Marital Rape-க்கு விதிவிலக்கு அளிக்கும், இந்தியக் குற்றவியல் சட்டம் (IPC) சட்டப்பிரிவு 375-ன் பிரிவை நீக்கச்சொல்லி அண்மையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை (Rape) குற்றமாகக் கருதும் இந்த பிரிவு 375, திருமணத்துக்குப் பின்பு கணவரால் நிகழ்த்தப்படும் கட்டாய உறவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது. இதைத்தான் எதிர்க்கின்றனர் பெண்ணிய ஆர்வலர்கள்.
``திருமணமான பெண்ணுடன் கணவனின் கட்டாய உறவு, பிரிவு 375-ல் குற்றமில்லை என்றாலும், அந்தப் பெண், IPC சட்டப்பிரிவு 326 (காயம் ஏற்படுத்துதல்), Section 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), Section 498A (வன்கொடுமைகள்) ஆகிய பிரிவுகள் புகார் அளிக்க வழிசெய்கிறது. எனவே எனவே, பிரிவு 375 அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது அல்ல” என்பது டெல்லி அரசின் வாதம்.
இந்நிலையில்தான், ``திருமணமாகாத பெண்களின் உரிமைகளைக் காக்கும் IPC சட்டப்பிரிவு 375, ஏன் திருமணமான பெண்களின் உரிமைகளைக் காப்பதில்லை என்பதுதான் இங்கு கேள்வி. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கோரிக்கைகள் நீதிமன்றத்துக்கு வரும்போதும், இதுகுறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என நீதிமன்றங்கள் விலகிப்போக வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள். எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
Marital Rape-ஐ குற்றமாக அறிவிக்கச் சொல்லி, கோரிக்கை எழும்போதெல்லாம் அதற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களின் முதன்மையானது, ``இந்த முடிவு இந்திய திருமண உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும்; மேலும், ஆண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு” என்பதுதான். ஆனால், ``Gender Neutral-லாக இதற்கெதிரான சட்டங்களை வகுப்பதால் ஆண்கள் பாதிக்கப்படப்போவதில்லை” என்பதே இதற்கு ஆதரவானவர்களின் பதில்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.
2. கவனம் ஈர்த்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. 125 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் 40% பெண்களுக்கும், 40% இளைஞர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க அம்சமாக, பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் கடந்த 2017-ம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் தற்கொலை கொண்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். குற்றவாளி எம்.எல்.ஏ-வாக இருந்த அதே பங்கர்மாவ் தொகுதியில் இவர் வேட்பாளாரக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற முயற்சிகள் அம்மாநில காங்கிரஸூக்கு புதிய முகம் அளித்தாலும், 1989-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேச தேர்தலில் பெரிதாக சோபித்ததில்லை என்பதே வரலாறாக இருக்கிறது. இந்த முறையும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, பா.ஜ.க இடையேதான் கடுமையாக போட்டி நிலவுகிறது.
இன்னொரு விஷயம்: ஏற்கனவே 2 அமைச்சர்கள் யோகி ஆதித்யநாத்தின் அரசிலிருந்து ராஜினாமா செய்திருந்த நிலையில், நேற்று தரம் சிங் சைனி என்ற 3-வது அமைச்சரும் ராஜினாமா செய்திருக்கிறார். இதனால், அம்மாநில பா.ஜ.க-விலிருந்து விலகிய எம்.எல்.ஏக்களின் பட்டியல் 8 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல, ஒரு காங்கிரஸ் மற்றும் ஒரு சமாக்வாதி எம்.எல்.ஏ என இதுவரை 2 எம்.எல்.ஏ-க்கள் அம்மாநில பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர்.
3. முதல்வர்களுடன் ஆலோசித்த மோடி
நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 2,47,417 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக, நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் நேற்று பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஓமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதாக குறிப்பிட்ட அவர், நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். இதனால், கட்டுப்பாடுகளை உள்ளூர் அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
4. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய தகவல்
57 வயதாகும் முதியவர் ஒருவருக்கு முதன்முதலாக பன்றியின் இதயம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது என அண்மையில் பார்த்தோம் அல்லவா? அது முதல்முறை இல்லையாம். அஸ்ஸாமைச் சேர்ந்த தானி ராம் பரூவா என்ற மருத்துவர் 1997-லிலேயே (25 ஆண்டுகளுக்கு முன்பு) இதேபோல, பன்றியின் இதயத்தை 32 வயது மனிதனுக்குப் பொருத்தியிருக்கிறார்.
ஆனால், அவர் அடுத்த 7 நாள்களில் இறக்கவே, பிரச்னை பெரிதாகி, அஸ்ஸாம் அரசு அவரையும், அவருக்கு உதவிய மருத்துவர்களையும் 40 நாள்கள் சிறையில் அடைத்திருக்கிறது. அதன்பிறகு, இவரின் வாழ்வே மாறிவிட்டது.
தற்போது 72 வயதாகும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தொண்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாகவும் பேசும் திறனை இழந்திருக்கிறார். தற்போது நோய்களைக் குணமாக்க உதவும் மரபணு பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், இப்போது அமெரிக்காவில், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை நோயாளிக்கு பொருத்தியிருக்கின்றனர். இது நோயாளிக்கு அதிகளவில் பொருந்திப்போகக்கூடியது. ஆனால், தானிராம் 1997-ல் சாதாரண பன்றியின் இதயத்தைப் பொருத்தியிருக்கிறார். இந்த இரண்டும்தான், இருவேறு அறுவை சிகிச்சைகளுக்கிடையே இருக்கும் வித்தியாசம்.
5. தென்னாப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு
கேப்டவுனில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
ரிஷப் பன்ட் மட்டும் 139 பந்துகளில் சதமடித்து, இந்திய அணியைக் காப்பாற்றினார். கே.எல்.ராகுல் (10), விராட் கோலி (29), ரிஷப் பன்ட் (100) தவிர அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்க வீரர்களில் ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி 212 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 20,911 (நேற்று முன்தினம்: 17,934) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 8,218 (7,372) 🔺
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 25 (19)🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,47,417 (1,94,720) 🔺
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 5,488 (4,868) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுவெளியில் மாஸ்க் அணியாதவர்களுக்கான அபராதத்தை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.
கேரள நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக, அண்மையில் நடிகர் திலீப்பின் முன்னாள் நண்பர் புதிய குற்றச்சாட்டுகளை வைத்ததைத் தொடர்ந்து, அந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக நடிகர் திலீப் மற்றும் அவர் சகோதரர் அனூப்பின் வீடுகளில் நேற்று கேரள குற்றப்பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை 5 மணியளவில் மேற்கு வங்க மாநிலத்தில் பிகானீர் - கவுகாத்தி ரயில் தடம்புரண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியா மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம், எல்லைகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்தும், தங்கள் படைகளை பின்வாங்குவது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினர். 2020-ம் ஆண்டிலிருந்து 14-வது முறையாக நடக்கும் பேச்சுவார்த்தை இது. ஆனால், இருதரப்பிலும் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
கர்நாடகா அரசு, காவிரியில் மேக்கேதாட்டூ திட்டத்தை வேகப்படுத்தவேண்டும் எனக்கூறி கடந்த 4 நாள்களாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி, டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமைய்யா தலைமையில் பாதயாத்திரை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அது நேற்று திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு Recap Edition-ல சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: