🔘 Recap: ஏர் இந்தியா எதிர்காலம் முதல் கூகுளின் புது முயற்சி வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🛩 `தாய் வீடு' திரும்பிய ஏர் இந்தியா; அடுத்து என்ன?
👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?
🇺🇦 பதற்றம் கூடும் உக்ரைன் எல்லை; மோத தயாராகும் அமெரிக்கா?
💉 உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனவா தடுப்பூசிகள்?
🛩 `தாய் வீடு' திரும்பிய ஏர் இந்தியா; அடுத்து என்ன?
அனைத்து அலுவல் வேலைகளையும் முடித்து, மொத்தமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சாவிக்கொத்தை டாடா குழுமத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு. 68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா மீண்டும் தாய் வீடு திரும்பியிருப்பதை மனப்பூர்வமாக மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்.
சரி, இனி ஏர் இந்தியா என்னவாகும்?
ஏர் இந்தியாவை அரசு விற்க காரணமே அதிலிருந்து அரசால் வருவாய் ஈட்ட முடியாததும், தொடர்ந்து கடனையும் நஷ்டத்தைச் சந்தித்துக்கொண்டிருந்ததும்தான். 2009-2010-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரைக்கும் 1,10,277 கோடி ரூபாயை ஏர் இந்தியாவின் கடன் பிரச்னைகளைத் தீர்க்க செலவளித்திருக்கிறது அரசு. கடந்தாண்டு நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கியது ஏர் இந்தியா (வருடத்திற்கு ~7,300 கோடி ரூபாய்).
இந்தளவு கடனை வைத்துக்கொண்டு எப்படி டாடா சமாளிக்கப்போகிறது? ஏர் இந்தியாவை வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப அது என்ன செய்யலாம் எனச் சொல்கிறது இந்த TSL Brief.
👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?
Chrome பிரவுசரில் பயனாளர்களை follow செய்யும் Third Party Cookies-க்குப் பதிலாக இந்த வாரம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இன்று இன்டர்நெட்டில் நாம் காணும் விளம்பரங்களின் தன்மையை மொத்தமாக மாற்றியமைக்கும் தன்மை கொண்டது இது.
இது எப்படி நம்மை பாதிக்கும்?
நீங்கள் ஒரு சராசரி இன்டர்நெட் யூசராக இருந்தாலே போதும். Cookies பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு வெப்சைட்டுக்கு நாம் செல்லும்போது, நம்மைப் பற்றி அந்த வெப்சைட் (நம் டிவைஸ்களில்) சேமிக்கும் தகவல்கள்தான் இந்த Cookies. ஒவ்வொருமுறை நாம் அந்த வெப்சைட்டிற்கு செல்லும்போதும், இவை அந்த வெப்சைட்டால் பயன்படுத்திக்கொள்ளப்படும்.
இவைதான் நாம் ஆன்லைனில் எங்கு சென்றாலும், இணைய விளம்பரங்கள் நம்மை சரியாக ஃபாலோ செய்யவும் உதவுபவை. இதற்குத்தான் கடிவாளம் போடப்போகிறது கூகுள். இதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இந்த TSL Explainer-ஐப் படிக்கலாம்.
🇺🇦 பதற்றம் கூடும் உக்ரைன் எல்லை; மோத தயாராகும் அமெரிக்கா?
சுமார் 1,00,000 வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருப்பதாகவும், எந்நேரம் வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் எனவும் கடந்த டிசம்பர் 14 அன்று TSL-ல் பார்த்தோம். இதோ… 40 நாள்கள் கடந்துவிட்டன. இன்னமும் பதற்றம் தணியவில்லை. மாறாக களச்சூழல் இன்னும் கொதிப்படைந்திருக்கிறது. தற்போது நடப்பது என்ன?
தன்னுடைய அண்டை நாடான உக்ரைன், மேற்குலக நாடுகளுடனான NATO அமைப்பில் இணையக்கூடாது என்பதுதான் புடின், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் உக்ரைனுக்கும் வைத்த முக்கிய கோரிக்கை. ஆனால், இதை அனைவரும் நிராகரித்துவிட்டனர். புடினும் சண்டைக்குத் தயாராகிவிட்டார்.
புடினின் பிடிவாதத்தைத் தணிக்க, அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள், நடத்திய பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கவில்லை. ``எனவே எந்நேரமும் உக்ரைனைத் தாக்கி, அந்நாட்டு ஆட்சியை ரஷ்யா காப்பாற்றலாம்; அதைத் தடுத்தாக வேண்டும்” எனத் தயாராக இருக்கின்றன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேலை நாடுகள்.
இதற்காக, ரஷ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் போலந்து, ஸ்லோவோகியா, ஹங்கேரி, ரோமானியா உள்ளிட்ட NATO அமைப்பின் உறுப்பு நாடுகளில், உக்ரைனுக்கு ஆதரவாகப் படைகளைக் குவிக்கவும் தொடங்கிவிட்டன. இதில் அண்மைய ஆச்சர்யம் அமெரிக்காவின் மூவ்தான்.
அது என்ன, ரஷ்யா - உக்ரைன் மோதலில் அமெரிக்காவின் பங்கு என்னவாக இருக்கும் என்பதைச் சொல்கிறது இந்த TSL Brief.
💉 உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனவா தடுப்பூசிகள்?
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு முயற்சிகளில், மக்களின் உயிரைக் காக்க, நமக்கு மலையளவு கைகொடுத்தவை தடுப்பூசிகளே. கடந்தாண்டு வந்த இரண்டாவது அலையில் நம் காதுகளுக்கு அடிக்கடி கேட்ட சைரன் சத்தங்களும், மரணச் செய்திகளும் இந்தாண்டு இல்லாமல் போனதற்கு காரணமும் இவையே.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 72% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். 94% பேர் குறைந்தது ஒரு டோஸாவது எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றின் பலனாகவே, ஓமிக்ரானால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அலையில், உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார் கோவிட் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வி.கே.பால்.
இதைக் கடந்த ஆண்டு டேட்டா மற்றும் இந்த ஆண்டு டேட்டாவை வைத்து ஒரு சின்ன அலசலை இந்த TSL Edition-ல் படிக்கலாம்.
அவ்வளவுதான்!
TSL-ன் தினசரி நியூஸ்லெட்டர்ஸ் பிடிச்சிருந்தா உங்களின் நண்பர்களுக்கும் அதை ஷேர் பண்ணுங்க. TSL பற்றிய உங்கள் அனுபவங்கள், கருத்துகளைப் பகிர்ந்துக்க நினைச்சா எனக்கு மெயில் அனுப்புங்க! 😀
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: