ஓமிக்ரான் முதல் எடப்பாடி வரை! #ICYMI
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 5 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
வீக்கெண்ட் வந்தாச்சு; அதனால இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 5 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
1️⃣ ஒமிக்ரான் வேரியன்ட்; நம் பதற்றம் சரியா? 😷
இந்த பேண்டெமிக்கின் `டைம் லூப்’பில் சிக்கி, திரும்பத் திரும்ப திணறுவது போன்ற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்துக்குமே மீண்டும் வந்துவிட்டது. ஒரு கொரோனா வேரியன்ட், மீண்டும் உலக நாடுகளைப் பதற்றம்கொள்ளச் செய்திருக்கிறது. என்ன காரணம்?
இதுவரை இல்லாத அளவு ஏன் ஒமிக்ரான் (B.1.1.529) வேரியன்ட்டுக்கு மட்டும் இவ்வளவு பதற்றம்?
காரணம், அதன் உருமாறும் தன்மைதான். ஒரு வைரஸ் ஒருமுறை / இருமுறை உருமாறினால், அதனால் பெரியளவில் பிரச்னைகள் இருக்காது. நம்முடைய தடுப்பூசிகள் தொடர்ந்து அதை எதிர்த்தும் வேலை செய்யும்; ஏற்கெனவே தொற்று வந்து உடலில் ஆன்டிபாடி இருப்பவர்களும் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஆனால், 50 முறை உருமாறினால்..? அதுவும், தடுப்பூசிகள் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன்கள் எனப்படும் பகுதியைக் குறிவைத்தே பணி செய்பவை. அந்த ஸ்பைக் புரோட்டீனில் மட்டுமே 30 முறை உருமாறினால்? கிட்டத்தட்ட கொரோனாவின் புது அவதாரம் போன்றது அது. அதனால்தான் உடனடியாக உலகிற்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்கள் தென்னாப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள். உலக சுகாதார நிறுவனமும் இதை Variant Of Concern என அறிவித்திருக்கிறது.
ஆனால், ஓமிக்ரான் எந்தளவுக்கு நோயாளிகள் மத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
2️⃣ ஆப்பிரிக்க நாடுகளை தண்டிக்கின்றனவா உலக நாடுகள்? ⚠️
கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட்டின் முதல் நோய்த்தொற்று கடந்த வாரம், தென்னாப்பிரிக்காவில் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக உலக சுகாதார மையத்திற்கு (WHO) தகவல் தரப்பட்டு, விரைவாக அது Variant Of Concern-னாகவும் அறிவிக்கப்பட்டது. ஒரு ஆபத்தான வேரியன்ட்டை இவ்வளவு விரைவில் கண்டறிந்து, அதை உலக நாடுகளுக்கு அறிவிப்பது இதுவே முதல்முறை. இந்த வேகத்திற்கு காரணம், ஜீனோம் கண்காணிப்பில் தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகளுக்கு இருக்கும் நிபுணத்துவமும், உடனடியாக இதை உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்ற அந்நாட்டின் அக்கறையும்தான். ஆனால், ``ஏன்தான் இப்படிச் செய்தோமோ?” என அவர்கள் புலம்பும்படி நடந்துகொண்டிருக்கின்றன பிற உலக நாடுகள்.
என்ன செய்தன அவை?
WHO ஓமிக்ரானை Variant Of Concern-னாக அறிவித்தவுடன், நமீபியா, ஜிம்பாப்வே உள்ப்ட 9 தென்னாப்பிரிக்க பிராந்திய நாடுகளுடனான சர்வதேச பயணங்களை ரத்து செய்தது அமெரிக்கா. தொடர்ந்து பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான் எனப் பல நாடுகளும் இதேபோல பயணத்தடைகளை விதித்தன. இந்தியா கடுமையான குவாரன்டைன் விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த தீவிரமும், அவசரமும்தான் தென்னாப்பிரிக்காவை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது.
உலக நாடுகளின் இந்த அணுகுமுறை சரியா, தென்னாப்பிரிக்கா கோபம் கொள்வதில் நியாயம் இருக்கிறதா என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
3️⃣ வறுமையின் பிடியில் 25% பேர்
முதல்முறையாக MPI (Multidimensional Poverty Index) என்னும் இந்தியாவின் வறுமையைக் கணக்கிடும் புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டிருக்கிறது நிதி ஆயோக். இதற்கு முன்பு இருந்த வறுமைக்கோடு கணக்கிடும் முறையில் மக்களின் தனிநபர் வருமானம் மற்றும் நுகர்வுத்திறன் ஆகியவை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், இந்த MPI-ல் மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, உடல்நலம் ஆகிய மூன்று பிரிவுகள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2015-16 ஆகிய காலத்தில் தேசிய குடும்பநல சர்வே வெளியிட்ட தகவல்களின் படி, இந்த MPI கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலேயே அதிகம்பேர் வறுமையில் வாடும் மாநிலம் பீகார் (51.91%). அதற்கடுத்த இடத்தில் ஜார்க்கண்ட் (42.16%), உத்தரப்பிரதேசம் (37.79%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.
கேரளா (0.71%), கோவா (3.76%), சிக்கிம் (3.82%) ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன. தமிழகம் (4.89%) இதில் கடைசியிலிருந்து 4-வது இடத்தில் இருக்கிறது.
மொத்தமாக இந்தியாவில் 25.01% பேர் வறுமையில் இருக்கின்றனர்.
ஒருவரின் தனிநபர் வருமானம் மட்டுமே அவருடைய வறுமையைக் கணக்கிட சரியான் அளவுகோல் இல்லை என நிபுணர்களால் கருதப்பட்டாதாலேயே, அது கைவிடப்பட்டு, தற்போது நிதி ஆயோக்கால் MPI முறை பின்பற்றப்படுகிறது.
4️⃣இந்தியாவிலும் உறுதியான ஓமிக்ரான்; இதுவரை நடந்தது என்ன?
முதன்முதலாக, நேற்று முன்தினம் இந்தியாவிலும் இருவருக்கு கொரோனா ஓமிக்ரான் வேரியன்ட் உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து மீண்டும் மக்களை கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்றச் சொல்லி அலர்ட் செய்திருக்கிறது மத்திய அரசு.
யார் அந்த இரண்டுபேர்?
நம் நாட்டில் பதிவாகியுள்ள இந்த இரண்டு தொற்றுகளுமே கர்நாடகா மாநிலத்தில்தான் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதல் நபர் தென்னாப்பிரிக்காவிலிருந்து, நவம்பர் 20-ம் தேதி பெங்களூருவுக்கு வந்த அந்நாட்டின் 66 வயது குடிமகன்.
இரண்டாம் நபர் 46 வயதாகும், பெங்களூருவில் வசிக்கும் ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்.
இவர்கள் இருவர் குறித்த கூடுதல் விவரங்களையும், மத்திய அரசு குறிப்பிட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், இங்கே படிக்கலாம்.
5️⃣ஏன் உட்கட்சி விதிகளைத் திருத்தியது அ.தி.மு.க?
இந்த வாரம் நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூன்று சட்டவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு உட்கட்சி தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவை கட்சிக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்த நிலையில்தான் இப்படியான மாற்றங்கள் நடந்திருக்கின்றன.
எதற்காக இந்த திருத்தங்கள்?
என்ன சொல்கின்றன புதிய விதிகள்?
எடப்பாடியின் கணக்கு என்ன? விரிவாக இங்கே படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன். இந்த வாரம் நிறைய புது உறுப்பினர்கள் TSL-ஐ படிக்கத் தொடங்கியிருக்கீங்க. உங்க அனைவருக்கும் நன்றி.
இதுபோக வீக்கெண்டில் TSL-கிட்ட இருந்து நீங்க என்ன மாதிரியான விஷயங்கள் எதிர்பார்க்குறீங்க, இந்த ரீவைண்ட் எடிஷன் பிடிச்சிருக்கா என்பது குறித்தும் உங்க கருத்துகளை என்னோட பகிர்ந்துக்கலாம். உங்க கமென்ட்ஸ் எங்களுக்கு ரொம்பவே முக்கியம்! ☺️
Happy Weekend! 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: