🔘 Recap: மத்திய பட்ஜெட் முதல் ஆளுநர் ஆக்ஷன் வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
Good Morning ☕️
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
📚 நீட் மசோதா: சட்டவிதிகளை மீறினாரா ஆளுநர்?
💰 மத்திய பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும்?
👨🏽⚖️ தஞ்சை மாணவி வழக்கு ஏன் CBI-க்கு மாற்றப்பட்டது?
🎯 பெகாசஸ் விவகாரம்: பொய் சொன்னதா மத்திய அரசு?
📚 நீட் மசோதா: சட்டவிதிகளை மீறினாரா ஆளுநர்?
நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதற்காக, கடந்த செப்டம்பர் 13-ம் தேதி தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை (Undergraduate Medical Degree Courses Bill, 2021) திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
இனி இந்த மசோதா என்னாகும், தமிழக அரசின் சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதை பற்றி விளக்குகிறது இந்த TSL Explainer.
💰 மத்திய பட்ஜெட் உங்களை எப்படி பாதிக்கும்?
கடந்த செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்.
5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் இடையே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், நிச்சயம் அந்த மாநிலங்களுக்கு`ஐஸ் வைக்கும்’ அறிவிப்புகள் இடம்பெறலாம் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ஆச்சர்யம்.
அப்படி நடக்கவில்லை! குறிப்பாக தேர்தல் நடைபெறவிருக்கும் (உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட்) மாநிலங்கள் சார்ந்து பெரிய, கவர்ச்சியான அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர் நிபுணர்கள்.
இன்னொரு முக்கியமான பாசிட்டிவ் அம்சம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேவைப்படும் மூலதனச் செலவினங்களை (Capital Expenditure / Capex) 5.54 கோடி ரூபாயிலிருந்து, 7.5 லட்சம் கோடி ரூபாயாக (35.4%) உயர்த்தியிருப்பது. இது ஏன் முக்கியம்?
ஒரு நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில், அரசு இந்த Capex-க்கு செலவிடும் தொகை உயரவேண்டும்.
உதாரணம்: புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், நாட்டின் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவை. இதனால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும்; வருங்காலத்தில் அரசுக்கும் இந்தக் கட்டமைப்புகளிலிருந்து வருமானம் வரும்;
கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் எனப் பல்வேறு துறைகளும் இதுசார்ந்து வளரும். இறுதியாக பொருளாதாரமும் உயரும். இதுதான் லாஜிக். அரசைப் போலவே தனியார் நிறுவனங்களும் தங்கள் Capex-ஐ அதிகப்படுத்தினால் அது நாட்டுக்கு இன்னும் நல்லது.
அந்த வகையில்தான், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான Capex-ஐ 35% அதிகம் உயர்த்தியிருக்கிறது அரசு. இதுபோக இந்த பட்ஜெட்டில் சொல்லப்பட்ட முக்கியமான விஷயங்கள் என்னென்ன, அவை உங்களை எப்படி பாதிக்கலாம் என்பதெல்லாம் குறித்து விரிவாக விளக்குகிறது TSL-ன் இந்த பட்ஜெட் ஸ்பெஷல் எடிஷன்.
👨🏽⚖️ தஞ்சை மாணவி வழக்கு ஏன் CBI-க்கு மாற்றப்பட்டது?
தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.
பா.ஜ.க-வினர் இந்தப் பிரச்னையை பெரியளவில் கையிலெடுத்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு ஆளும் தி.மு.க அரசுக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சரி, இந்த வழக்கை ஏன் சிபிஐ-க்கு மாற்றியது நீதிமன்றம்? அதற்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறிப்பிட்ட காரணங்கள் என்னென்ன? விரிவாக விளக்குகிறது இந்த TSL Explainer.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
🎯 பெகாசஸ் விவகாரம்: பொய் சொன்னதா மத்திய அரசு?
இஸ்ரேலின் NSO நிறுவனம் பற்றி, கடந்த வாரம் `நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டிருக்கும் கட்டுரை பல புதிய தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்திய அரசியலில் அதிர்வுகளையும் கிளப்பியிருக்கிறது. அப்படி என்ன புதிதாக தெரியவந்திருக்கிறது?
பெகாசஸ் (Pegasus) என்னும் உளவு மென்பொருளைத் தயாரித்து உலக நாடுகள் பலவற்றிற்கும் விற்பனை செய்யும் நிறுவனம்தான் இந்த NSO. இந்த மென்பொருளை வைத்துக்கொண்டு இஸ்ரேல் எப்படி உலக அரசியலில் தாக்கம் செலுத்தியது, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏன் இந்த மென்பொருளை வாங்கின, NSO நிறுவனத்தின் எதிர்காலம் எனப் பல முக்கியமான விஷயங்களுக்கு விடைசொல்லியிருக்கிறது அந்தக் கட்டுரை. அதிலிருந்து மிக முக்கியமான விஷயங்களை மட்டும் அலசுகிறது இந்த TSL Edition.
அவ்வளவுதான்!
TSL-ன் தினசரி நியூஸ்லெட்டர்ஸ் பிடிச்சிருந்தா உங்களின் நண்பர்களுக்கும் அதை ஷேர் பண்ணுங்க. TSL பற்றிய உங்கள் அனுபவங்கள், கருத்துகளைப் பகிர்ந்துக்க நினைச்சா எனக்கு மெயில் அனுப்புங்க! 😀
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
இந்த TSL Edition உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க! ❤️