🔘 Recap: விமானங்களின் 5G சிக்கல் முதல் மத்திய அரசின் IAS திட்டம் வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 5 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 5 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🎯 மாநில IAS அதிகாரிகளை மத்திய அரசு குறிவைப்பது ஏன்?
🚦ஏன் நிராகரிக்கப்படுகின்றன மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்?
🚘`ம்' சொல்வாரா எலான் மஸ்க்?
🛫 விமானங்கள் 5G-க்கு பயப்படுவது ஏன்?
🚀 இஸ்ரோ: சோமநாத் முன் இருக்கும் புதிய சவால்கள் என்ன?
🎯 மாநில IAS அதிகாரிகளை மத்திய அரசு குறிவைப்பது ஏன்?
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையானது (DoPT), கடந்த ஜனவரி 12-ம் தேதி அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.
இந்திய ஆட்சிப்பணியாளர் விதிகள் (Indian Administrative Service Rules) 1954-ல், பிரிவு 6-ஐ மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்து மாநிலங்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் அதில் கூறியிருக்கிறது.
இந்த மாற்றங்கள், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் எனவும், மாநில நலனுக்கு எதிராகப் போய் முடியும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த மாற்றங்கள் எதற்காக, இது எப்படி மாநிலங்களை பாதிக்கும்?
IAS அதிகாரிகள் நியமனம் முதல் கூட்டாட்சி தத்துவத்திற்கு இது எப்படி சிக்கலை ஏற்படுத்தும் என்பது வரை விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.
🚦ஏன் நிராகரிக்கப்படுகின்றன மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்?
டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்குபெற, தமிழகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட, அலங்கார ஊர்திக்கு (Tableau) மத்திய அரசு அனுமதி மறுத்த விவகாரம் தமிழக அரசியலில் கடந்த வாரம் அதிக பரபரப்பைக் கிளப்பியது.
தமிழகத்தின் அலங்கார ஊர்தியை அனுமதிக்கவேண்டும் என தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியும் மத்திய அரசு முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. இந்நிலையில், நிராகரிக்கப்பட்ட அந்த ஊர்தியானது தமிழகத்தின் குடியரசு தின அணி வகுப்பில் இடம்பெறும் எனவும், அதற்கடுத்து தமிழகத்தின் முக்கிய நகரங்களும் அது அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இப்படி ஒவ்வோர் ஆண்டும், சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு புறக்கணிப்பதும், அதைத்தொடர்ந்து எதிர்ப்புகள் எழுதுவதும் வாடிக்கையாக இருக்கிறது. ஏன் இந்தக் குழப்பங்கள்? எந்த ஊர்தி தேர்வு செய்யப்படவேண்டும் என்பதை யார் முடிவு செய்கிறார்கள்?
விரிவாக விடைசொல்கிறது இந்த TSL Explainer.
🚘`ம்' சொல்வாரா எலான் மஸ்க்?
``ஏன் இன்னும் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை?” எனக் கேட்டிருந்த ஒரு ட்விட்டர் பயனாளியின் கேள்விக்கு,``இந்திய அரசுடன் இருக்கும் பிரச்னைகள் இன்னமும் தீரவில்லை” என அண்மையில் பதிலளித்திருந்தார் அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க். இதையடுத்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா எனப் பல மாநில அமைச்சர்களும், எலான் மஸ்க்கை தங்கள் மாநிலங்களுக்கு வர அழைப்பு விடுத்தனர்.
தமிழகம் சார்பில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் எலான் மஸ்க்கிற்கு தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருந்தார். ஆம்னி பஸ் ஸ்டாண்டில் ஆள் தேற்றுவது போல, இவ்வளவு மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக அழைத்தும் ஏன் எலான் மஸ்க் இன்னும் சைலன்ட்டாக இருக்கிறார்? காரணம், அவரின் பிரச்னையே வேறு!
அது என்ன, இந்திய அரசுடன் எலான் மஸ்க்கிற்கு இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை விளக்குகிறது இந்த TSL கட்டுரை.
🛫 விமானங்கள் 5G-க்கு பயப்படுவது ஏன்?
ஏர் இந்தியா, எமிரேட்ஸ், லுஃப்தான்ஸா, ஜப்பான் ஏர்லைன்ஸ், கொரியன் ஏர்லைன்ஸ் எனப் பல சர்வதேச விமான நிறுவனங்கள் கடந்த புதன்கிழமை அமெரிக்காவிற்கு செல்லும் அல்லது அமெரிக்காவுக்குள் இயங்கும் தங்கள் விமான சேவைகளில் பலவற்றை (சரக்கு விமானங்கள் உள்பட) ரத்து செய்தன. சில விமானங்களின் நேரத்தை திடீரென மாற்றின. இதனால், உலகம் முழுக்கவும் விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டன.
ஏர் இந்தியா மட்டும் மொத்தம் 8 விமானங்களை இரண்டு நாள்களுக்கு ரத்து செய்தது. ஏன் இப்படி செய்தன விமான நிறுவனங்கள்? காரணம், அமெரிக்காவில் அன்றைக்கு செயல்பாட்டுக்கு வந்த 5G சேவை.
இதற்கும் விமானங்களுக்கும் என்ன தொடர்பு, விமான நிறுவனங்கள் 5G-யைக் கண்டு அஞ்சுவது ஏன் உள்ளிட்ட விஷயங்களை விளக்குகிறது இந்த TSL Explainer.
🚀 இஸ்ரோ: சோமநாத் முன் இருக்கும் புதிய சவால்கள் என்ன?
இஸ்ரோவின் 10-வது தலைவராக கடந்த வாரம் பதவியேற்றுள்ளார், விஞ்ஞானி எஸ்.சோமநாத்.
1985-ம் ஆண்டு முதன்முதலாக VSSC (Vikram Sarabhai Space Centre)-ல் இணைந்த இவர், பி.எஸ்.எல்.வி, GSLV MKIII உள்ளிட்ட இஸ்ரோவின் மிக முக்கியமான ராக்கெட் திட்டங்களில் பங்காற்றிய, ராக்கெட் விஞ்ஞானி. சந்திரயான், ககன்யான் எனக் கடந்த 4 ஆண்டுகளாகவே இஸ்ரோவுக்கு பரபரப்பான காலம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இன்னும் கூடுதலான சவால்கள் காத்திருக்கின்றன சோமநாத்திற்கு.
ககன்யான் முதல் விண்வெளி சந்தையில் தனியார் முதலீடு வரை அப்படி என்னென்ன சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன, அவற்றின் முக்கியத்துவம் என்ன உள்ளிட்ட விஷயங்களைப் பேசுகிறது இந்த TSL Edition.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
👉 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணிஉங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: