பிபின் ராவத்தின் மறைவு முதல் ஜோ பைடனின் மாநாடு வரை! #ICYMI
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 5 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 5 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
1️⃣அப்பாவிகளை சுட்ட ராணுவம்; என்ன நடந்தது நாகலாந்தில்?
நாகலாந்தில் கடந்த சனிக்கிழமை அன்று ராணுவம் 14 அப்பாவிகளை சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ``பயங்கரவாதிகள் எனத் தவறுதலாக சுட்டுவிட்டோம்" என ராணுவமும், ``எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் எங்கள் மக்களை சுட்டுவிட்டார்கள்" என அப்பகுதி மக்களும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த உயர்மட்ட விசாரணையும் தற்போது நடந்துவருகிறது.
இந்த சம்பவத்தில் எங்கே தவறு நடந்தது, சனிக்கிழமை மாலையன்று நாகலாந்தில் நடந்தது என்ன என்பது குறித்து விளக்குகிறது TSL-ன் இந்த எடிஷன்.
2️⃣எலான் மஸ்க்கிற்கு முட்டுக்கட்டை போடுகிறதா இந்தியா? 🛰
`சாட்டிலைட் இன்டர்நெட்’ சேவையை அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த எலான் மஸ்க்கின் `ஸ்டார்லிங்க்’ நிறுவனத்தின் முயற்சிகளுக்கு தற்காலிகமாக முட்டுக்கட்டை போட்டிருக்கிறது ட்ராய்.
இந்தியாவின் கிராமப் புறங்களில் சாட்டிலைட் இன்டர்நெட் மூலம் பிராட்பேண்ட் சேவையை அடுத்த ஆண்டு முதல் வழங்க திட்டமிட்டு, அதற்கான முன்பதிவுகளும் தொடங்கியிருந்தன. இந்நிலையில்தான், கடந்த நவம்பர் 26-ம் தேதி, இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ``ஸ்டார்லிங்க் இந்தியாவில் இயங்குவதற்கு எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே வாடிக்கையாளர்கள் அவற்றை முன்பதிவு செய்யவேண்டாம். மேலும், ஸ்டார்லிங்க் நிறுவனம் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்காக லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.
இந்த சாட்டிலைட் இன்டர்நெட் என்றால் என்ன, இந்தியாவுக்கு இது எந்த வகையில் உதவலாம் போன்ற விஷயங்கள் குறித்து இங்கே படிக்கலாம்.
3️⃣பலனளிக்காத மம்தாவின் முயற்சிகள்? 👎
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை எதிர்த்து எத்தனை அணிகள் போட்டியிடப்போகின்றன என்பதுதான் தேசிய அரசியலில் கடந்த சில மாதங்களாக ஹாட் டாபிக். வழக்கம்போல காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ், அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக, மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கினார் மம்தா பானர்ஜி. இதையடுத்து,
காங்கிரஸே மீண்டும் 2024-ல் எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்குமா?
அல்லது காங்கிரஸ் அங்கமாக இருக்கும் கூட்டணிக்கு வேறு கட்சிகள் (திரிணமுல், தேசியவாத காங்கிரஸ் போன்ற) தலைமை தாங்குமா?
அல்லது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மாற்றாக, திரிணமுல் தலைமையில் புதியதொரு கூட்டணி உருவாகுமா?
எனப் பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த திட்டப்படிதான், மம்தா பானர்ஜியின் கடந்த மாத மும்பை பயணமும் இருந்தது.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே ஆகியோரை சந்தித்தார் மம்தா. அதைத் தொடர்ந்து மம்தா காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்ததும், அவரின் தேர்தல் ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்ததும் இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்பாக்கியது. இந்நிலையில்தான், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய இரு கட்சிகளும் மம்தாவின் அழைப்புக்கு `நோ' சொல்லியிருக்கின்றன. இந்த இரு கட்சிகளும் மம்தாவை புறக்கணித்தது ஏன் என்பதை இங்கே படிக்கலாம்.
4️⃣பிபின் ராவத் விட்டுச்சென்ற இமாலய சவால்!
கடந்த புதன் கிழமை குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்திருக்கிறார் இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத். சீனா, பாகிஸ்தான் என இரு எல்லைகளிலும் இன்னும் பதற்றம் தணியாத சூழலில், இந்தியாவின் தலைமைத் தளபதி உயிரிழந்தது, தேசத்திற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் எல்லைகளில் மட்டுமல்ல; இந்தியாவுக்குள்ளேயும் நம் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பங்காற்றியர் பிபின் ராவத்.
முப்படைகளையும் ஒருங்கிணைத்து Integrated theatre command-களை உருவாக்க தீவிரமாக இயங்கிவந்தார் பிபின். இந்தப் பணிகளின் முக்கியத்துவம் என்ன, Integrated theatre command என்றால் என்ன என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
5️⃣🤝 ஜெயிக்குமா ஜோ பைடனின் `மாநாடு'?
சுமார் 110 நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைத்து, உலகின் மிகப்பெரிய `ஜனநாயகத்திற்கான மாநாட்டை’ (Summit for Democracy) நேற்று ஆன்லைனில் நடத்தி முடித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எவ்வளவோ சர்வதேச மாநாடுகள் அவ்வப்போது நடந்துவந்தாலும், பைடனின் இந்த மாநாடு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையிலும், உலக அரசியலிலும் ஏன் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, சீனாவையும், ரஷ்யாவையும் இந்த மாநாடு கோபப்படுத்தியிருப்பது ஏன் என்பது குறித்து விரிவாக இங்கே படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன். இந்த வாரம் நிறைய புது உறுப்பினர்கள் TSL-ஐ படிக்கத் தொடங்கியிருக்கீங்க. உங்க அனைவருக்கும் நன்றி.
இதுபோக வீக்கெண்டில் TSL-கிட்ட இருந்து நீங்க என்ன மாதிரியான விஷயங்கள் எதிர்பார்க்குறீங்க, இந்த ரீவைண்ட் எடிஷன் பிடிச்சிருக்கா என்பது குறித்தும் உங்க கருத்துகளை என்னோட பகிர்ந்துக்கலாம். உங்க கமென்ட்ஸ் எங்களுக்கு ரொம்பவே முக்கியம்! ☺️
Happy Weekend! 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: