🎯 விவசாய போராட்டங்கள் முதல் சீனாவின் ஏவுகணை வரை #ICYMI
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 5 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
வீக்கெண்ட் வந்தாச்சு; அதனால இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 5 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🎯 வேளாண் சட்டங்களோடு முடிந்ததா போராட்டம்?
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக, கடந்த வாரம், தொலைக்காட்சிகளில் தோன்றி அறிவித்தார் இந்தியப் பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு டெல்லி, பஞ்சாப், உ.பி எல்லைகளில் போராடும் விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ``ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் உறுதியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” எனக் கொண்டாடினர். ஆனால், இன்னும் விவசாயிகளுக்கும் அரசுக்குமான முரண்பாடுகள் முடியவில்லை. தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேசும்போது, ``போராடும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார். ஆனால், இன்னும் விவசாயிகள் வீடு திரும்பவில்லை.
காரணம், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் பல கோரிக்கைகள் ஒன்றுதானே தவிர, அதுவே முழு கோரிக்கை அல்ல. அதைத் தாண்டியும் பல பிரச்னைகளை எழுப்பி வந்தார்கள். தற்போது போராட்டம் இன்னும் நீடிக்கவிருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கைகளையும் பிரதமர் பரிசீலிக்கவேண்டும் என வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் விவசாயிகள். அப்படி அவர்கள் குறிப்பிட்ட 6 கோரிக்கைகள் குறித்து, இங்கே படிக்கலாம்.
📈 ஏன் மொபைல் கட்டணங்களை ஏற்றுகிறது ஏர்டெல்?
ப்ரீபெய்டு பிளான்களுக்கான கட்டணங்களை 20 முதல் 25% வரை உயர்த்தியிருக்கிறது ஏர்டெல். நேற்று முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. ஏர்டெல்லைத் தொடர்ந்து Vi (வோடஃபோன் ஐடியா) நிறுவனமும் கட்டணங்களை இதேபோல உயர்த்திவிட்டது. இந்தக் கட்டண உயர்வுகள் ஏன்?
2016-ல் ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்திய டெலிகாம் சந்தை நிறைய மாற்றங்களைச் சந்தித்தது. அப்போது, ஜியோ மிகக்குறைவான விலையில் சேவைகளை வழங்கவே வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விலையைக் குறைத்தன. இது அதன் வருமானத்தைப் பெருமளவில் பாதித்தது. பின்னர் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல், 2018-ல் ப்ரீபெய்டு பிளான்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டுவந்தன ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்கள்.
அதுவரையிலும் புழக்கத்தில் இல்லாத, வேலிடிட்டி அடிப்படையிலான ரீசார்ச் முறையையும் கொண்டுவந்தன. இதனால், ஒருவர் குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகைக்கு ரீசார்ஜ் செய்யவில்லை எனில், அடுத்த சில நாட்களில் இன்கமிங் கால்களைக் கூட பெற முடியாது.
இந்த மாற்றங்கள் அனைத்தையும் டெலிகாம் நிறுவனங்கள் செய்ய காரணம், தங்களின் ARPU (Average Revenue Per User)-ஐ உயர்த்துவதற்காகத்தான். இந்த ARPU-வை ஏன் ஏர்டெல் முக்கியமானதாகக் கருதுகிறது, எப்படி அதனால் தைரியமாக விலையை ஏற்றமுடிந்தது என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு அமெரிக்கா அஞ்சுவது ஏன்? 🇨🇳
ஒரே ஒரு ஏவுகணை சோதனை மூலம் அமெரிக்காவின் பி.பியை ஏற்றியிருக்கிறது சீனா. ``அமெரிக்காவை சீனா விஞ்சிவிட்டது எனச் சொல்ல இதுவே போதுமே?” என இந்த சோதனைக்கு எக்கச்சக்க பில்ட் அப் ஏற்றுகிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள்.
அப்படி என்னதான் செஞ்சது சீனா?
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு `பைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகை சீனாவின் புதிய சோதனை குறித்து எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை ஒன்று வெளியிட்டது. அந்த செய்தியின் சாராம்சம் இதுதான்.
``கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லக்கூடிய ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயனிக்கும் திறன்கொண்ட) ஏவுகணைகளை ரகசியமாகப் பரிசோதனை செய்திருக்கிறது சீனா. இந்த சோதனைகள் அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. ஏனெனில், இந்த தொழில்நுட்பத்துடன் தற்போது உலகில் இருக்கும் ஒரே நாடு சீனாதான்”
அமெரிக்காவின் வியப்புக்கும், அச்சத்திற்கும் காரணம் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன்தான். அப்படி இந்த ஏவுகணையில் என்ன இருக்கிறது? ஏன் சீனாவின் இந்த ஏவுகணை குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
🔍 The Personal Data Protection Bill - அத்துமீறுகிறதா அரசு?
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசு தாக்கல் செய்யவிருக்கும் கிரிப்டோகரன்சிகளுக்கான ஒழுங்குமுறை மசோதா, நாடு முழுக்க பலத்தை எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அந்தளவுக்கு இல்லையெனினும், அதே அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் அனைவரின் வாழ்விலும் தாக்கல் செலுத்தப்போகிற அதன் பெயர், The Personal Data Protection Bill, 2019.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதி வடிவம் தயார் செய்யப்பட்டு, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதில் இருக்கும் சில அம்சங்கள் காரணமாக, இந்த மசோதாவில் நிறைய திருத்தங்கள் செய்யவேண்டும் என போர்க்கொடி உயர்த்துகின்றனர் எதிர்க்கட்சியினரும், பிரைவசி ஆர்வலர்களும். அவை என்ன, இந்த மசோதா எதிர்காலத்தில் நம்மை எப்படி பாதிக்கலாம் என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
🏠 கட்டுக்குள் வந்துவிட்டதா இந்தியாவின் மக்கள் தொகை?
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டு மக்களின் நிலையைப் பற்றி புரிந்துகொள்ள துல்லியமான தரவுகளைத் தரும். எனவே அதன் முடிவுகள் மீது மக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த அளவுக்கு துல்லியம் இல்லையென்றாலும்கூட, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய குடும்ப நல சர்வே (National Family Health Survey- NFHS)-யின் முடிவுகளையும் ஆய்வாளர்களும், அரசு நிர்வாகிகளும் அதேபோல கூர்ந்து கவனிப்பார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முந்தைய ட்ரெய்லராகவே இதைக் கருதுவார்கள்.
1992-93-லிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த NFHS எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி 2019-21 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நாட்டின் ஐந்தாவது NFHS-யின் முடிவுகள் அண்மையில் மத்திய சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டது. அதில் தெரியவந்திருக்கும் புள்ளி விவரங்களில் சில மகிழ்ச்சியளிப்பவையாகவும், சில கவலையளிப்பதாகவும் உள்ளன. குறிப்பாக இந்தியாவின் மக்கள் தொகை பற்றி தெரியவந்திருக்கும் விஷயங்கள் நம்பிக்கையளிப்பதாக உள்ளன. அவை குறித்து விரிவாக இங்கே படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன். இதுபோக வீக்கெண்டில் TSL-கிட்ட இருந்து நீங்க என்ன மாதிரியான விஷயங்கள் எதிர்பார்க்குறீங்க, இந்த ரீவைண்ட் எடிஷன் பிடிச்சிருக்கா என்பது குறித்தும் உங்க கருத்துகளை என்னோட பகிர்ந்துக்கலாம். உங்க கருத்துகளை எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
Happy Weekend! 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: