🔘 Recap: ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் முதல் கொரோனா மாத்திரை வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🔭 `விடியல்' ரகசியம் சொல்லுமா ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்?
🗳 BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?
🛡கொரோனா: புதிய தடுப்பூசிகளின் ரோல் என்ன?
💉 மூன்றாவது டோஸூக்கு எந்த தடுப்பூசி?
1️⃣ `விடியல்' ரகசியம் சொல்லுமா ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்?
கடந்த சனிக்கிழமையன்று தென் அமெரிக்காவின் ஃபிரெஞ்ச் கியானாவிலிருந்து ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் (James Webb Space Telescope) அடுத்தடுத்த நாள்களை, ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் இன்னும் சில நாள்களில் எந்தப் பிரச்னையும் செய்யாமல், சமர்த்தாக சுற்றுவட்டப்பாதையில் நின்று, தன் பணியைத் தொடங்கிவிட்டால் போதும்; நாம் இதுவரைக்கும் இந்தப் பிரபஞ்சம் பற்றி அறியாத பல ரகசியங்கள் வெளிவருவது உறுதி. அப்படி என்ன சொல்லப்போகிறது இந்த தொலைநோக்கி?
அது ஓர் ஆதி ரகசியம். இந்த பிரபஞ்சம் எப்படி பிறந்தது என்பதற்கான விடையை நமக்கு சொல்வதுதான் இந்த வெப் தொலைநோக்கியின் முதல் டாஸ்க். இது எப்படி சாத்தியம், இதை அறிந்துகொள்வது ஏன் முக்கியம் உள்ளிட்ட விவரங்களை அறிய இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.
2️⃣ BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா பற்றியும், அதில் சொல்லப்பட்டிருந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பற்றியும் ஏற்கெனவே TSL-ல் பார்த்திருந்தோம். இதனால் என்னவெல்லாம் பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் அப்போது பார்த்தோம். அதுதொடர்பாக, இந்த வாரம் Article 14 தளத்தில் மிக முக்கியமான விஷயங்கள் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையாக வெளியாகியிருக்கின்றன.
- ஆதார் தகவல்கள் இதற்கு முன்பு பா.ஜ.க (புதுச்சேரி), தெலுங்குதேசம் (ஆந்திரா) கட்சிகளால் எப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன,
- இந்த முறைகேடுகள் குறித்து செய்திகள் வந்தபின்கூட ஏன் UIDAI, தேர்தல் ஆணையம் போன்றவை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை,
- தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பது என்பது எப்படி கட்சிகளுக்கு சாதகமாக அமையும் போன்ற முக்கியமான விஷயங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை. அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஹைலைட்ஸை இங்கே படிக்கலாம்.
3️⃣ கொரோனா: புதிய தடுப்பூசிகளின் ரோல் என்ன?
இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஒரு கொரோனா மருந்துக்கும் இந்த வாரம் அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதியளித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆகவும், கொரோனா மருந்துகளின் எண்ணிக்கை 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் V ஆகிய 3 தடுப்பூசிகளை மட்டும்தான் மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் அண்மையில் அறிமுகமான இந்த தடுப்பூசிகளும், ஆன்டி வைரல் மாத்திரையும் இந்தியாவின் கொரோனா சிகிச்சைகளில் முக்கிய பங்காற்றலாம்.
இதில் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன, முதல்முறையாக இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா மாத்திரைகள் யாருக்கு, எந்தளவு பயனளிக்கும் உள்ளிட்ட விவரங்களை இந்த Explainer-ல் படிக்கலாம்.
4️⃣ மூன்றாவது டோஸூக்கு எந்த தடுப்பூசி?
வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் இணை நோய் உள்ள முதியோர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கவிருக்கின்றன.
இந்த பூஸ்டர் டோஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாமா அல்லது ஏற்கெனவே இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியையேதான் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விக்கு, ``பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை பரிசீலித்து, ஜனவரி 10-ம் தேதிக்கு முன்பாகவே பதில் சொல்லிவிடுவோம்” எனத் தெரிவித்திருக்கிறார் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா.
ஏன் அரசு இதை இன்னும் உறுதியாக சொல்லத் தயங்குகிறது, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டால் என்னாகும், வெளிநாடுகளில் நிலை என்ன உள்ளிட்ட விஷயங்களை இந்த TSL எடிஷனில் படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
👉 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணிஉங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎊
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: