🔘 Recap: தடுப்பூசி சர்ச்சை முதல் மோடியின் பஞ்சாப் விசிட் வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🚁 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான CFIT
🫁 'எலிகள் சொன்ன' ஓமிக்ரான் உண்மைகள்
💉 தடுப்பூசிகளின் காலாவதி தேதி சர்ச்சை எதனால்?
🚔 பிரதமர் மோடி ஏன் திரும்ப போனார்?
1️⃣ 🚁 பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணமான CFIT
கடந்த டிசம்பர் மாதம் 8-ம் தேதி, சூலூரிலிருந்து குன்னூரை நோக்கி பயணம் செய்த Mi-17v5 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் அந்த துயர விபத்தில் உயிரிழந்தனர்.
நாட்டை அதிரச்செய்த இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க, முப்படைகள் சார்பில் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணையை முடித்துள்ளது.
இந்த விசாரணையில், விபத்துக்கான காரணம், CFIT (Controlled Flight Into Terrain) எனத் தெரியவந்துள்ளது.
இந்த CFIT என்றால் என்ன, எதனால் இது ஏற்படுகிறது உள்ளிட்ட விவரங்களை இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.
2️⃣ 🫁 'எலிகள் சொன்ன' ஓமிக்ரான் உண்மைகள்
ஓமிக்ரான் வேரியன்ட், டெல்டா வேரியன்ட்டைவிடவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் இதற்கு முன்பு TSL-ல் பார்த்தோம் இல்லையா? தற்போது, ஏன் ஓமிக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்பதற்கு எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் விடை கிடைத்துள்ளது.
ஏன் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது ஓமிக்ரான்?
நம்முடைய சுவாச மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். வாய், மூக்கு, தொண்டை போன்றவை மேல் சுவாச மண்டலம். மூச்சுக்குழல், நுரையீரல் போன்றவை கீழ் சுவாச மண்டலம்.
இதில், ஓமிக்ரான் வகை வைரஸானது, கீழ் சுவாச மண்டலமான நுரையீரலில் மிகக்குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. பெர்லின், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் உள்பட அண்மையில் பல இடங்களிலும், எலிகளை வைத்து நடந்த சோதனைகளில் இது உறுதியாகியிருக்கிறது.
இந்த ஆய்வுகள் ஏன் முக்கியம் எனவும், ஏன் ஓமிக்ரானால் நுரையீரலை அதிகம் தாக்க முடியவில்லை எனவும் விளக்குகிறது இந்த TSL Explainer.
3️⃣ 💉 தடுப்பூசிகளின் காலாவதி தேதி சர்ச்சை எதனால்?
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிகளின் காலாவதி தேதி அண்மையில் நீட்டிக்கப்பட்டதாலும், புதிய காலாவதி தேதியை முந்தைய தடுப்பூசிகளில் அச்சிட பாரத் பயோடெக் முயன்றதாலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன.
எங்கே தொடங்கியது பிரச்னை?
15-18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படி தன்னுடைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற இடத்தில், காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட கோவாக்சின் போடப்படுவதை அறிந்த ட்விட்டர் பயனாளி ஒருவர், அந்த விவரங்களை அப்படியே ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
அதில், கோவாக்சினின் காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட விவரங்கள் இருக்கவே, ``அப்படியெனில் பழைய தடுப்பூசிகளைத்தான் சிறார்களுக்கு செலுத்துகின்றன்றனரா?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
மேலும், பெங்களூருவில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், விரைவில் காலாவதியாகவிருக்கும் கோவாக்சின் தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக்கொண்டு, அவற்றில் புதிய காலாவதி தேதியை அச்சிட்டு மீண்டும் அந்த மருத்துவமனைகளுக்கே வழங்கும் வேலைகளிலும் பாரத் பயோடெக் நிறுவனம் இறங்கியிருக்கிறது.
இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, உடனே விவகாரம் பெரிதானது. இதைத் தொடர்ந்துதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமும் அளித்தது.
இந்த விவகாரத்தில் எங்கே தவறு நடந்தது, ஏன் தடுப்பூசிகளின் காலாவதி தேதிகள் நீட்டிக்கப்படுகின்றன என்ற விவரங்களை இந்த TSL எடிஷனில் படிக்கலாம்.
4️⃣ 🚔 பிரதமர் மோடி ஏன் திரும்ப போனார்?
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த புதன் கிழமை பஞ்சாப் சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது அவரின் சாலைவழிப் பயணம் அங்கு நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களால் தடைபட்டு, சாலையிலேயே சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் டெல்லி திரும்பினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசு மீது கடும் அதிருப்தி தெரிவிக்கவே, இந்த விவகாரம் தற்போது அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில், மாநில காவல் துறை செய்த தவறுகளே இதற்கு காரணம் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை விமர்சித்து வருகிறது பா.ஜ.க. இந்த விவகாரத்தில் புதன் கிழமையன்று என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது இந்த TSL எடிஷன்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
👉 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணிஉங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: