🔘 Recap: ஹிஜாப் அடக்குமுறைகள் முதல் உ.பி தேர்தல் வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
Good Morning ☕️
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?
🇮🇱 இஸ்ரேலிலும் தொடங்கிய `பெகாசஸ்' புயல்
🛕 உத்தரப்பிரதேச தேர்தல் சொல்லப்போகும் மெசேஜ்!
💴 மாறாத ரெப்போ விகிதங்கள்; நமக்கு நல்லதா கெட்டதா?
🧕 அரசியல் + மதம்; கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை ஏன்?
- ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்கலாமா?
- சீருடை விதிகள் அதற்கு இடம் தரலாமா?
- சீருடை விதிகள் அனுமதி மறுத்தாலும், அதைத் தாண்டி ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு சட்டப்படி உரிமை உண்டா?
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடகாவில் விவாதமாகியிருக்கும் கேள்விகள் இவை. உடுப்பியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 8 மாணவிகளை வைத்து தொடங்கப்பட்ட இந்தப் பிரச்னை, இன்று கர்நாடகாவின் பல மாவட்டங்களில் இந்து மாணவர்கள் vs இஸ்லாமிய மாணவர்கள் என்பது வரை நீண்டிருக்கிறது.
கர்நாடக பள்ளிகள் முன்பு, காவல்துறை அணிவகுப்பு நடத்தும் அளவுக்கு பதற்றம் சூழ்ந்திருக்கிறது. இந்தப் பிரச்னை எங்கே எப்படி தொடங்கியது? இதன் பின் உள்ள அரசியல் காரணங்கள் என்ன? விரிவாக விளக்குகிறது இந்த TSL Explainer.
இந்த வாரம் கர்நாடகாவில் நடந்த காவித்துண்டு போராட்டங்களும், மாணவிகள் மீதான அடக்குமுறையும் தேசத்தையே அதிரச் செய்தது. அப்படிப்பட்ட சம்பவங்களின் வீடியோ தொகுப்புகளை இந்த TSL Edition-ல் காணலாம்.
🇮🇱 இஸ்ரேலிலும் தொடங்கிய `பெகாசஸ்' புயல்
``You can't keep snakes in your backyard and expect them to only bite your neighbour”
ஹிலரி கிளின்டனின் இந்த வாசகம், இப்போதைய இஸ்ரேல் அரசியலுக்கு அப்படியே பொருந்தும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரையும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசு உளவுபார்த்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் சில மாதங்கள் முன்பு புயலைக் கிளப்பின. இதேபோல அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பி, தற்போது அங்கு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பெகாசஸ் குறித்த TSL Explainer-ஐ இங்கே படிக்கலாம்.
இப்படி வெளிநாடுகள் பெகாசஸ் விவகாரத்தில் தீவிரமாக இருந்தாலும், இஸ்ரேலில் இதனால் எந்த பரபரப்பும் இல்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலக அரசியலில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தியதாக செய்திகள் வெளியானபோதுகூட இஸ்ரேலில் அவை பெரிதாக எதிரொலிக்கவில்லை.
ஆனால், இந்த வாரம் இஸ்ரேல் ஊடகங்களில் பெகாசஸ் விவகாரம் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. பிற நாடுகளைப் போலவே இஸ்ரேல் மக்களும் பெகாசஸ் விவகாரத்தை உற்று கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஏன் இந்த திடீர் மாற்றம்? விடைசொல்கிறது இந்த TSL Explainer.
🛕 உத்தரப்பிரதேச தேர்தல் சொல்லப்போகும் மெசேஜ்!
நாடு முழுக்க எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் தேர்தல்களில் ஒன்று, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல். 403 உறுப்பினர்களைக் கொண்ட மெகா சட்டசபை, தேசிய அரசியலில் ஏற்படுத்தும் விவாதங்கள், நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு 2 ஆண்டுகள் முன் வருவது என இந்த எதிர்பார்ப்பிற்கு பல காரணங்கள். அப்படிப்பட்ட உ.பி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிந்திருக்கிறது.
`இந்த உ.பி சட்டமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்’ என மட்டும் மேலோட்டமாகச் சொல்லப்பட்டாலும், தற்போதைய அரசியல் சூழலில் அதைத் தாண்டியும் சில முக்கியமான விஷயங்களை உ.பி தேர்தல் முடிவுகள் முடிவு செய்யவிருக்கின்றன. அவை என்னென்ன? விரிவாக விளக்குகிறது இந்த TSL Explainer.
💴 மாறாத ரெப்போ விகிதங்கள்; நமக்கு நல்லதா கெட்டதா?
ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை தொடர்ந்து 10-வது முறையாக மாற்றாமல் விட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.
கோவிட்டின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீளத்தொடங்கி, தற்போது விலைவாசி உயர்வு நடுத்தர மக்களையும், ஏழைகளையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சமயத்தில் எப்படியும் ரிசர்வ் வங்கி ரிவர்ஸ் ரெப்போவை ஏற்றும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், ஏற்றவில்லை.
ரெப்போவுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? 🏦
இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் ரிசர்வ் வங்கி கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் இந்த ரெப்போ வட்டி விகிதங்கள். நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ இவை தினந்தோறும் நம் நிதி வாழ்க்கையில் தாக்கம் செலுத்தி வருகின்றன. எப்படி? இந்த முடிவு நம்மை எப்படி பாதிக்கும், நம் நிதி திட்டமிடல்கள் எப்படி இதனால் மாறலாம்? எளிமையாக விளக்குகிறது இந்த TSL Edition.
அவ்வளவுதான்!
TSL-ன் தினசரி நியூஸ்லெட்டர்ஸ் பிடிச்சிருந்தா உங்களின் நண்பர்களுக்கும் அதை ஷேர் பண்ணுங்க. TSL பற்றிய உங்கள் அனுபவங்கள், கருத்துகளைப் பகிர்ந்துக்க நினைச்சா எனக்கு மெயில் அனுப்புங்க! 😀
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
இந்த TSL Edition உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க! ❤️